News March 23, 2025
7 மகள்கள்!! சாபம் என்றனர்.. சாதனையாக்கிய தந்தை!

வரிசையாக 7 பெண் பிள்ளைகள். ஊரில் மக்கள், இது சாபம்’ எனவும், பெண்களின் படிப்பிற்கு செலவழிக்க வேண்டாம் என்றும் அட்வைஸ் செய்தனர். ஆனால், அவர்கள் சொன்ன சாபத்தையே சாதனையாக மாற்றி இருக்கிறார் பீகாரை சேர்ந்த மாவுமில் ஓனர் ஒருவர். ஏழ்மை சோதித்த போதிலும் மனம் தளராத அவர், கடினமாக உழைத்து இன்று தனது 7 மகள்களையும் அரசின் காவல் பணியில் சேர்த்துள்ளார். வசைபாடியவர்கள், வாயடைத்து நிற்கின்றனர்.
Similar News
News March 26, 2025
அச்சச்சோ அத மறந்துட்டனே… பாதியில் திரும்பிய விமானம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 257 பயணிகளுடன் சீனா புறப்பட்ட விமானம், 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பியுள்ளது. பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதுதான் விமானியிடம் பாஸ்போர்ட் இல்லையென தெரிந்ததாம். இதனால், திரும்பி சான் பிரான்ஸிஸ்கோ வந்த விமானம், புதிய விமானிகள் குழுவினருடன் மீண்டும் சீனா புறப்பட்டுச் சென்றுள்ளது.
News March 26, 2025
ஒடிசாவில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

ஒடிசாவில் சட்டசபையில் இருந்து 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கோஷமிட்டனர். சபாநாயகர் அவர்களை எச்சரித்தும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமளியில் ஈடுபட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
News March 26, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!