News March 23, 2025

சேப்பாக்கத்தில் விசில் போட ரெடியா…!

image

ஐபிஎல் தொடரில் CSK, MI அணிகள் மோதினால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். சேப்பாக்கத்தில் இன்றிரவு CSK vs MI போட்டி நடைபெற உள்ளது. தல தோனியின் தரிசனத்திற்காக இப்போதே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அனிருத் இசை நிகழ்ச்சியுடன் போட்டி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். விசில் போட ரெடியா?

Similar News

News July 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை 10 – ஆனி 26 ▶ கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: பவுர்ணமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ பிறை: வளர்பிறை.

News July 10, 2025

கணிக்க முடியாத கேம் சினிமா: இயக்குநர் ராம்

image

ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ என்ற படம் 4-ம் தேதி வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேசிய ராம் ‘பறந்து போ’ சிறப்பு காட்சியை பார்த்தவர்கள், ராமின் காமெடியை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார். சினிமா என்பது கணிக்க முடியாது கேம் என கூறிய அவர் இப்படியும் நடக்கலாம், அப்படியும் நடக்கலாம் என்றார்.

News July 10, 2025

பால் குடிக்காத குழந்தை… தாய் செய்த கொடூரம்

image

தாய்மார்களுக்கு ஏற்படும் பிரசவத்துக்கு பிந்தைய மனச்சோர்வை (postpartum depression) நாம் பொருட்படுத்துவதில்லை. இதனால் சில நேரம் விபரீதங்கள் கூட நடக்கலாம். பெங்களூருவில் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை பால் குடிக்காமல் விடாமல் அழுதபடியே இருந்ததால் எரிச்சலடைந்த தாய் ராதா(27), கொதிக்கும் நீரில் குழந்தையை போட்டு கொன்றுள்ளார். இதையடுத்து அவரை போலீஸ் கைது செய்தனர். அவரின் கணவர் மதுவுக்கு அடிமையானவராம்.

error: Content is protected !!