News March 23, 2025
செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். SHARE பண்ணுங்க.
Similar News
News September 23, 2025
செங்கல்பட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நந்திவரம், மறைமலைநகர் சமுதாயக்கூடம், பெரும்பாக்கம் ஊராட்சி நுண்கண்பாளையம், மதுராந்தகம் நகராட்சி நெல்வாய், திருப்போரூர் வட்டாரம் காயார் ஊராட்சி, காட்டாங்குளத்தூர் வட்டாரம் கால்வாய் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
News September 23, 2025
செங்கல்பட்டு: குறைதீர் கூட்டத்தில் 334 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 334 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமச்சடங்கு உதவித் தொகையை ஆட்சியர் தி. சினேகா வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், நேர்முக உதவியாளர்கள், தனித்துணை ஆட்சியர், பல துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News September 23, 2025
செங்கை: சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்

செங்கல்பட்டில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 2 இளைஞர்கள், 14 மற்றும் 16 வயதுடைய சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதில் 14 வயது சிறுமி கர்ப்பமானார். பெற்றோர் புகாரின் பேரில், வி.தினேஷ் மற்றும் கே.தினேஷ் ஆகிய 2 இளைஞர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சமூக ஊடகங்களில் பாதுகாப்பாக வழிநடத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.