News March 23, 2025
பிரபல வீரர் காலமானார்

“Artist Artest” என்று அழைக்கப்படும் தொழில்முறை மல்யுத்த வீரரான கிரஹாம் கிரீன் அகால மரணமடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் ஒஹையோவில் Xtreme Valley Wrestling போட்டியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது. அண்மையில் குத்துச்சண்டை லெஜெண்ட் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமான நிலையில், இது ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
Similar News
News March 28, 2025
நிலுவையுடன் அகவிலைப்படி உயர்வு… எப்போது கிடைக்கும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கான <<15913593>>அகவிலைப்படியை<<>> (DA) 53-ல் இருந்து 55% ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது, ஜனவரி, பிப்ரவரி மாத நிலுவைத் தொகையுடன் மார்ச் மாத ஊதியத்தில் சேர்த்து வழங்கப்படும். அதாவது, இந்த மாதம் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்திற்கான அகவிலைப்படி மொத்தமாகக் கிடைக்கும். SHARE IT.
News March 28, 2025
பத்திரானா உள்ளே… CSK பிளேயிங் XI-ல் யார் யார்?

CSK அணியில் ரச்சின், ருதுராஜ்(C), திரிபாதி, தீபக் ஹூடா, சாம் கரன், ஜடேஜா, தோனி(W), அஸ்வின், நூர் அகமது, பத்திரானா, கலீல் அகமது உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அதே போல், RCB அணியில், விராட் கோலி, பிலிப் சால்ட், படிக்கல், ரஜத் பட்டிதார்(C), லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா(W), டிம் டேவிட், குருணால் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர். எந்த அணி பலமாக உள்ளது?
News March 28, 2025
‘அப்பா’ ஸ்டாலின்: விஜய் பேச்சால் அதிர்ந்த அரங்கம்!

தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து விஜய் பேசினார். நீங்க ஒழுங்கா ஆட்சி நடத்தியிருந்தா, பெண்களின் பாதுகாப்பு நல்லா இருந்திருக்கும். ஆனா, இன்னைக்கு பச்ச புள்ளைங்க, படிக்கிற புள்ளைங்க, சின்ன பொன்னுங்க, வேலைக்கு போற பொன்னுங்களுக்கு நடக்குற கொடுமைய வாய்விட்டு சொல்ல முடியல சார். இதுல வேற உங்கள எல்லோரும் அப்பானு வேற கூப்பிடுறதா சொல்றீங்க என விஜய் பேசினார்.