News March 23, 2025
சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 26, 2025
சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 25, 2025
நடிகர் மனோஜ் உயிரிழப்பு – திரை பிரபலங்கள் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் இன்று மாலை 6 மணியளவில் காலமானார். மனோஜூக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரை பிரபலங்கள் அனைவரும் சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் குவிந்துள்ளனர்.
News March 25, 2025
சென்னையில் காவல் துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை மாநகர காவல் உளவுப்பிரிவு (1) துணை ஆணையராக சக்திவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் துணை காவல் ஆணையர் ஹரிகிரண் பிரசாத் மாற்றப்பட்டு, புதிய துணை ஆணையராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஸ்கரன், வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மெகலீனா ஹைடன், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.