News March 23, 2025
திருப்பூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

திருப்பூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாவட்டத்தின் சில பகுதிகளில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
Similar News
News March 27, 2025
திருப்பூர்: வலுப்பூர் அம்மன் கோயில்!

திருப்பூர், சேமலைக்கவுண்டம்பாளையத்தில், புகழ்பெற்ற வலுப்பூர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு சர்வ நோய்களை தீர்க்கும் சக்திவாய்ந்த பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கிறார். மன்னர் விக்ரமாத்த சோழனின் மகளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், அம்மனை வணங்கியதால் குணமானது. இதனால் வலுப்பூர் அம்மன் என அழைக்கப்படுகிறார். நோய் பாதிப்பு உள்ளவர்கள், அம்மனை சென்று வழிபட்டு வந்தால், நிச்சயம் நோய் குணமாகுமாம். இத SHARE பண்ணுங்க.
News March 27, 2025
மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய கலெக்டர்

திருப்பூர், பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் வழங்கினார். இதில் முதல்வர் (புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி) சு.மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமானவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
News March 27, 2025
உடுமலை கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தும்பலபட்டியை சேர்ந்த வசந்தகுமார். இவர் குறிச்சிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிகள் படித்து வருகின்றார். பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுடன் வாளவாடி பிரிவு அருகே உள்ள பிரதான கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக வசந்தகுமார் தண்ணீரில் மூழ்கி பலியானார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.