News March 23, 2025
SRH vs RR: சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்!

ஹைதராபாத்தில் நடைபெறும் SRH அணிக்கு எதிரான போட்டியில் RR அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில், சஞ்சு சாம்சன் Impact வீரராக களமிறங்குகிறார். பேட்டிங்கில் மிரட்டும் SRH அணி இந்த போட்டியில் எவ்வளவு ரன்களை குவிக்கும் என நினைக்குறீர்கள்?
Similar News
News March 28, 2025
தம்பதிகளே… இதற்கு மட்டும் கூச்சப்படாதீங்க!

கணவன்- மனைவி, ஒரு விஷயத்துக்காக மட்டும் எப்போதும் தயங்கவே கூடாது. Sorry கேட்க ஒருபோதும் யோசிக்காதீர்கள். ஈகோ, கோபம் என எதுவானாலும் மன்னிப்புக் கேட்டுவிட்டால், எல்லாமே சரியாகிவிடும். கணவர் வந்து கேட்கட்டும், மனைவி முதலில் கேட்கட்டும் என ஒத்திப் போடுவதை தவிருங்கள். இருவரும் பேசாமல் இருப்பதால் எதுவும் மாறாது. Sorry சொல்லி உணர்வை வெளிப்படுத்துங்க. எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை உணர்வீர்கள்.
News March 28, 2025
பரிதாப நிலையில் சிஎஸ்கே… பயம் காட்டும் ஆர்சிபி!

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் திரிபாதி(5), கேப்டன் ருதுராஜ்(0), ஹூடா(4), சாம் கரன்(8) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். ஆர்சிபி வீரர் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 9 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் எடுத்துள்ள சிஎஸ்கே, இன்னும் 11 ஓவர்களில் 144 ரன்கள் எடுக்குமா?
News March 28, 2025
அதிமுக சூழ்ச்சி பலிக்காது.. ஸ்டாலினின் காட்டமான பதிவு

தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா? அல்லது குறைந்திருக்கிறதா? என்பதை புள்ளிவிவரங்கள் சொல்லும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சிக்காலங்கள் போல் சாதி – மத மோதல்கள் நிகழ்ந்துள்ளனவா? எனவும் x தளத்தில் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் அதிமுக set செய்ய நினைக்கும் narrative-வுக்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது என்றும் தெரிவித்துள்ளார்.