News March 23, 2025
தற்காப்பு கலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கராத்தே, சிலம்பம் விளையாட்டுப் பயிற்சி பெற்ற பெண் பயிற்சியாளர்களிடமிருந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 19, 2-வது தளம், உதகை-6 என்ற முகவரிக்கு 26.3.2025 குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்காப்பு கலைப் பயிற்சியாளருக்கு ரூ.9,000/-விளையாட்டுப் பயிற்சியாளருக்கு ரூ .15,000/- வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
நீலகிரியில் சிக்கித் தவிக்கும் சிறுத்தை!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பந்தலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட வேலி கம்பியில் இன்று ஒரு சிறுத்தை சிக்கியது. இந்நிலையில், சிறுத்தையை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, அதனை பாதுகாப்பாக மீட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 13, 2025
கோத்தகிரி அருகே பரபரப்பு: அழுகிய நிலையில் புலி சடலம்!

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகில் உள்ள கடசோலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு, சில மீட்டர்கள் தொலைவில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில், புதிதாக தோண்டப்பட்ட கிணற்றுக்குள், புலியின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 13, 2025
நீலகிரி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய தகவல்!

நீலகிரி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. <


