News March 23, 2025

2013 முதல் தொடரும் சோகம்… MI-ன் வரலாறு மாறுமா?

image

IPL-ல் அதிக ஃபேன்ஸ் கொண்டது சென்னை, மும்பை அணிகள்தான். இந்த இரு அணிகளும் இன்று இரவு பலப்பரீட்சை நடத்த உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆனால், மும்பை அணிக்கு ஒரு சோக வரலாறு தொடர்கிறது. 2013ம் ஆண்டில் இருந்து, முதல் போட்டியில் அந்த அணி வென்றதே இல்லை. அதனால், சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற மும்பை அணி முனைப்பு காட்டும். இன்று வெல்லப் போவது யார்? உங்கள் கணிப்பு என்ன?

Similar News

News March 28, 2025

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரும்?

image

மத்திய அரசு ஊழியர்களுக்கான <<15913593>>அகவிலைப்படி<<>>யை (DA) 2% மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அந்த வகையில், ரூ.50,000 அடிப்படை சம்பளம் பெறும் ஒரு ஊழியருக்கு ரூ.1,000 வரை DA அதிகரிக்கும். அதேபோல், ரூ.70,000 சம்பளம் பெறுபவர்களுக்கு ரூ.1,400-ம், ரூ.1 லட்சம் பெறுபவர்களுக்கு ரூ.2,000-ம் அதிகமாக கிடைக்கும். இந்த DA உயர்வால் நாடு முழுவதும் 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள் பயனடைவார்கள்.

News March 28, 2025

தெரியுமா உங்களுக்கு?

image

☛சராசரியாக வயது வந்தவரின் கை முஷ்டி அளவுக்கு இதயம் இருக்கும். ☛நாள் ஒன்றுக்கு இதயம் 100,000 முறை துடிக்கிறது. ☛சராசரி எடை 250 – 350 கிராம் ☛கருத்தரித்த 4 வாரங்களில் இதயத்துடிப்பு துவங்கிவிடும். ☛உடலுக்கு வெளியேவும் இதயம் துடிக்கும். ☛முதல் இதய அறுவை சிகிச்சை அமெரிக்காவில் 1983ல் நடந்தது. ☛திங்கள்கிழமைகளில் அதிக மாரடைப்பு நிகழ்கின்றன.

News March 28, 2025

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(DA) உயர்வு!

image

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மேலும் 2% உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அகவிலைப்படி 53-ல் இருந்து 55% ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும். ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.

error: Content is protected !!