News March 23, 2025
ஈரக்கையுடன் போன் சார்ஜ் போடுறீங்களா? உஷார் மக்களே!

மக்களே, கரண்ட் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் 9வது படிக்கும் மாணவி அனிதா, ஈரக்கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றுள்ளார். அப்போது அவரை ஹைவோல்டேஜ் மின்சாரம் தாக்கியுள்ளது ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற போது, மாணவி உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய கவனக்குறைவு ஒரு உயிரை பறித்து விட்டது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் அதீத கவனத்துடன் இருங்க மக்களே!
Similar News
News March 26, 2025
பாகிஸ்தானை மீண்டும் ஊதி தள்ளிய நியூசிலாந்து

தொடர் தோல்வியால் துவண்டு போன பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. ஏற்கெனவே தொடரை இழந்த அந்த அணி கடைசி போட்டியிலும் சொதப்பியது. தொடக்கம் முதலே தடுமாறிய அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் டிம் சீஃபர்ட் 97 ரன்கள் விளாச 10 ஓவரில் நியூசிலாந்து எளிதாக வெற்றி பெற்று தொடரை 4 – 1 என கைப்பற்றியது.
News March 26, 2025
கடைசி வரை நிறைவேறாத மனோஜின் ஆசை!

48 வயதில் மாரடைப்பால் மறைந்த நடிகர் மனோஜின் ஒரு ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே போய்விட்டது. தந்தை பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 1978-ல் வெளியான சிவப்பு ரோஜாக்கள் படத்தின் 2ம் பாகத்தை இயக்க மனோஜ் விரும்பினார். சிம்பு, ஷ்ருதிஹாசனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து படமாக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த ஆசை நிறைவேறுவதற்கு முன்பே மனோஜ் மறைந்துவிட்டார்.
News March 26, 2025
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?

இந்தியா- சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையை, விரைவில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியாவிற்கான சீன தூதர் வெய் தெரிவித்துள்ளார். வரும் ஏப்.1ஆம் தேதி, இருநாடுகளுக்கு இடையேயான 75 ஆண்டுகால ராஜதந்திர உறவை கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா, எல்லை மோதல்கள் காரணமாக, இருநாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சேவை, கடந்த 5 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.