News March 23, 2025
திமுக அரசு நல்லா குறட்டை விட்டு தூங்குது: அன்புமணி

மதுரை தனக்கன்குளத்தில் நள்ளிரவில் நடந்த படுகொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதியை கூட தடுக்க முடியாமல் திமுக அரசு குறட்டை விட்டு தூங்குவதாக அவர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News August 6, 2025
ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: அன்புமணி

CM ஸ்டாலின் குடும்பத்தில் உள்ளவர்களும், முதல்வரை சுற்றி வளையம் அமைத்திருப்பவர்களும் காவல்துறையின் அதிகார மையங்களாக திகழ்வதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். SSI சண்முகவேலின் படுகொலையை சுட்டிக்காட்டி, காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியாமல் தவிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மக்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த தவறியதற்காக தமிழக மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News August 6, 2025
Way2News வினாடி வினா கேள்வி பதில்கள்..

கேள்விகள்:
1. தமிழ் மொழியின் முதல் இலக்கண நூல் எது?
2. உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது எது?
3. இந்தியாவில் முதல் பெண் முதலமைச்சரை பெற்ற மாநிலம் எது?
4. நமது உடலின் மிகச்சிறிய எலும்பு எங்கே அமைந்துள்ளது?
5. புல்லாங்குழலில் எத்தனை துளைகள் உள்ளன?
சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க.
<<17318725>>பதில்கள் <<>>Way2News-ல் மதியம் 12:30 மணிக்கு வெளியாகும்.
News August 6, 2025
வெள்ளி விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹126-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,26,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 4-ம் தேதி கிலோ வெள்ளி ₹1,23,000ஆக இருந்த நிலையில், 2 நாளில் ₹3,000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.