News March 23, 2025
திருச்சி: மக்களிடம் மனுக்களைப் பெற்ற அமைச்சர்

திருச்சி நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று மார்ச் 22, நடைபெற்றது. அந்த வகையில் பொதுமக்கள் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் நேரு, விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Similar News
News September 23, 2025
திருச்சி: ரயில் நிலையத்தில் சிறுவன் மீட்பு

ரயில்வே பாதுகாப்பு படையினர் “ஆபரேஷன் நன்கே பரிஸ்டே” என்ற முன்னெடுப்பின் கீழ், ரயில் நிலையங்களில் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை மீட்டு குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்து வருகின்றனர். இந்நிலையில்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று காலை சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த ஒரு சிறுவனை, ஆர்.பி.எப் காவலர்கள் மீட்டு ரயில் நிலையத்தில் உள்ள குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனர்.
News September 23, 2025
திருச்சி: முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 25ஆம் தேதி காலை 10 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
திருச்சி: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் செப்.,26-ம் தேதி, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் வேலை நாடுனர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE NOW!