News March 23, 2025

இஃப்தார் நோன்பு திறக்க விஜய் உத்தரவு!

image

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கட்சி நிர்வாகத்திற்காக தவெகவில் 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அத்தனை இடங்களிலும் முறைப்படி இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை கட்சியினர் தவறாமல் நடத்த வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News March 29, 2025

மகளிர் உரிமைத் தொகை: தகுதிகளை தளர்த்த கோரிக்கை

image

மகளிர் உரிமைத் தொகை திட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகப் பேரவையில் பேசிய எம்.எல்.ஏ ஜெயக்குமார், மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்கு விதிக்​கப்​பட்​டுள்ள விதி​கள் கடுமை​யாக உள்​ளதால் ஏராள​மான பெண்​கள் இதனைப் பெற முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. இதனால் கெடு​பிடிகளைத் தளர்த்த வேண்​டும் எனக் கூறியுள்ளார். அதிமுகவின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா?

News March 29, 2025

CSKவை கிண்டலடித்தவர் மீது கொடூரமாக தாக்குதல்!

image

CSK அணியை கிண்டல் செய்த சென்னையை சேர்ந்த ஜீவரத்தினம் என்பவரை, மது போதையில் இருந்த 7 பேர் கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவர், சென்னை ராயப்பேட்டை ஹாஸ்பிடலில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், தாக்கியவர்கள் அனைவருமே ஜீவரத்தினத்தின் நண்பர்கள்தானாம்.

News March 29, 2025

கோடை வெயில்: அதிகரிக்கும் சரும பாதிப்புகள்

image

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, சின்னம்மை, உயர் ரத்த அழுத்தம், நீர்ச் சத்து இழப்பு, சரும பாதிப்புகள் பரவலாக மக்களிடையே காணப்படுகின்றனர். நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளை நாடுவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!