News March 23, 2025
போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள்.. அரசுக்கு நெருக்கடி

பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கூறுகையில், திமுக தலைவராக இருந்த கருணாநிதி தன்வசம் வைத்திருந்த அரசு ஊழியர் வாக்கு வங்கியை, மகன் ஸ்டாலின் இழந்து விட்டார் என்று விமர்சித்துள்ளார்.
Similar News
News August 6, 2025
வெள்ளி விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹126-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,26,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 4-ம் தேதி கிலோ வெள்ளி ₹1,23,000ஆக இருந்த நிலையில், 2 நாளில் ₹3,000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
News August 6, 2025
SI குடும்பத்திற்கு ஒரு கோடி நிதியுதவி: ஸ்டாலின்

மடத்துக்குளம் அதிமுக MLA-வின் தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட SI சண்முகசுந்தரத்தின் குடும்பத்திற்கு ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ₹30 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும் சண்முகசுந்தரத்தின் மகனுக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
News August 6, 2025
பாஜகவுக்கு தான் அடிமை இல்லை: EPS

பாஜகவுக்கு தான் அடிமை இல்லை எனவும் கூட்டணி வேறு கொள்கை வேறு எனவும் EPS திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜக, அதிமுக இடையே எந்த பிரச்சனை இல்லை என்றும் விளக்கியுள்ளார். குறைகளே கண்டறிய முடியாத அளவுக்கு 5 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அதிமுகவின் திட்டங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.