News March 23, 2025
திருப்பதியில் மீண்டும் பிளாஸ்டிக்கா?

திருமலை திருப்பதியில் சுற்றுச்சூழலை காக்க பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்கள் புழக்கத்திற்கு வந்தன. அண்மையில் வரிசையில் காத்திருந்த இரு மாநில பக்தர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், கண்ணாடி பாட்டில்களை வைத்து தாக்கிக் கொண்டனர். இதில் சிலருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது. இதனால் அலர்ட் ஆன TTD, மக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாக்கெட்டுகளை பயன்படுத்தலாமா என ஆலோசித்து வருகிறது.
Similar News
News March 30, 2025
11 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தில் நேற்று 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை ஏர்போர்ட் -104, சென்னை ஏர்போர்ட்-102.3, கோவை-100.4, தருமபுரி, கரூர், பரமத்தியில் தலா 102.2, ஈரோடு, மதுரையில் தலா 103.2, திருச்சி-102.2, திருத்தணி-100.4, வேலூர்-103.5, சேலம்-103.6 பதிவானது. இன்றும் பகல் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News March 30, 2025
ஏழைகளுக்கு கூலி கொடுக்க கூட மனமில்லை: கனிமொழி

உழைக்கும் மக்களையே ஊழல்வாதிகள் என முத்திரை குத்த தமிழ்நாடு பாஜகவினர் களமிறக்கப்பட்டுள்ளதாக கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். ஏழைகள் உழைப்பிற்கு கூலி கொடுக்க ஒன்றிய பாஜக அரசு மனமில்லை எனவும், மோடி அரசுக்கு எதிரான திமுகவின் போராட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் கமலாலயம் தவிப்பதாகவும் விமர்சித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை விடுவிக்க கோரி நேற்று திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
News March 30, 2025
தினமும் சாமி கும்பிடும்போது.. முழு பலன் பெற..

கடவுளை தூய மனதுடன் வழிபடவோ, வீட்டில் பூஜை செய்ய முடியவில்லை என்றால் அதற்கு கர்ம வினைகளே காரணம். இவற்றை மாற்ற வேண்டும் என நினைத்தால், இந்த 3 விஷயங்களைக் கண்டிப்பாக செய்யுங்கள். இறைவனை வழிபடும்போது கைகளால் பூக்களைத் தூவி, வாய் முழுக்க கடவுள் மந்திரங்களை ஓதிமனதை ஒருநிலைப்படுத்தி வழிபட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே முழு பலனையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.