News March 23, 2025

IPL 2025: கடைசி நேரத்தில் ஷர்துல் தாக்கூருக்கு அடித்த லக்!

image

இந்த ஆண்டு IPL தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான் விளையாட மாட்டார் எனப்படுகிறது. அவருக்கு பதிலாக தற்போது ஷர்துல் தாக்கூரை ₹2 கோடிக்கு லக்னோ அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. IPL மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத ஆல் ரவுண்டர் தாக்கூர், லக்னோ அணியுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Similar News

News March 29, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 29) ₹160 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,360க்கும், சவரன் ₹66,880க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹113க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,13,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,400 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 29, 2025

ஏன் தோனி முன்னரே களமிறங்கவில்லை?

image

சோஷியல் மீடியாவில் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சென்னை அணியின் கையில் இருந்து நழுவிய போது, அவருக்கு பதிலாக அஸ்வின் களமிறங்கினார். ஷிவம் துபே அவுட்டானதுமே அவர் ஏன் வரவில்லை என பலர் வினவுகின்றனர். அதே நேரத்தில் சிலர், அவர் எப்படியோ 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸரும் அடிச்சாரே அதுவே போதும் என்றும் கமெண்ட் செய்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News March 29, 2025

இரண்டில் உங்களுக்கு பிடிச்ச படம் எது?

image

லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘கைதி’, அருண்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘வீர தீர சூரன் 2’ இரு படங்களுக்குமே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இரு கதைகளுமே ஒரே இரவில் போலீஸ் – ரவுடி கும்பலுக்கு மத்தியிலான ஈகோ சண்டையை சொல்கின்றன. தேவையில்லாமல், இதற்கு மத்தியில் இடையில் சிக்கும் ஹீரோ. அவர் முன்னாள் பெரிய கை. இரண்டில் உங்களை ரொம்ப கவர் பண்ண படம் எது?

error: Content is protected !!