News March 23, 2025

‘குஷி’ ஓடவில்லை என்றால் செத்திருப்பேன்: SJ சூர்யா

image

தனது கேரியரை மாற்றிய ‘குஷி’ படம் குறித்து இயக்குநரும், நடிகருமான SJ சூர்யா சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். குஷியின் பர்ஸ்ட் காப்பியை பார்த்த யாருக்கும் படம் பிடிக்கவில்லை என்று கூறிய அவர், ஆனால் ரிலீஸ் ஆனதும் பெரிய ஹிட் அடித்ததாக தெரிவித்தார். ஒருவேளை ரிலீஸ் ஆன பிறகும், படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்திருந்தால், அந்த வலியால் நான் செத்திருப்பேன் என்றார். உங்களுக்கு‘குஷி’ படம் பிடிக்குமா?

Similar News

News March 26, 2025

பிரபல நடிகை, மாடல், டான்சர் காலமானார்

image

பிரபல ஹாலிவுட் நடிகை, டான்சர் மற்றும் மாடலான சிந்தியானா சாண்டேஞ்சலோ (58) காலமானார். திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஹாஸ்பிடலில் அவர் மரணமடைந்தார். அண்மையில் அவர் மேற்கொண்ட காஸ்மெடிக் இன்ஜக்‌ஷன் சிகிச்சையின் பக்க விளைவே இவர் மரணத்துக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் எம்டிவி டாப் 10 ஆல்பங்களில் ஒரே நேரத்தில் இவரின் 3 பாடல்கள் இடம்பெற்றதே இதுவரை சாதனையாக உள்ளது.

News March 26, 2025

நான் இல்லனா என்னடா பண்ணுவீங்க!

image

<<15896827>>இன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் UPI சேவைகள் இயங்காமல் போனது<<>>. இதனால், பொது மக்களின் வாழ்க்கை கன்னா பின்னா என பாதிக்கப்பட்டது. முடி வெட்டிவிட்டு காசு கொடுக்க முடியாமல் ஒருவர் சிக்கிக்கொண்டார். ஓட்டலில் ஒருவர் சாப்பிட்டு பில் கட்ட முடியாமல் மாட்டிக் கொண்டார். UPI வாழ்வின் அங்கமாகிவிட்ட நிலையில், யாரும் இப்போது பணமே வைத்துக் கொள்வதில்லை. அதன் விளைவு இன்று தெரிந்துவிட்டது.

News March 26, 2025

உங்கள் மனைவியிடம் இந்த 7 அறிகுறிகள் உள்ளதா?

image

உங்கள் மனைவி, உங்கள் மீது கோபத்தில் இருப்பதை பின்வரும் அறிகுறிகள் உணர்த்தும்: 1)வழக்கத்துக்கு மாறான அமைதி 2)அடிக்கடி உங்களை விமர்சிப்பது 3)அடிக்கடி எரிச்சல் / கோபம் 4)தலைவலி, தசைப்பிடிப்பு அறிகுறிகள் 5)வழக்கமாக செய்துகொண்டிருந்த விஷயங்களிலிருந்து விலகுவது 6)தாம்பத்ய உறவை தவிர்ப்பது 7)கடமைக்காக பேசுவது, இடித்துப் பேசுவது என பேச்சில் அதிருப்தி. உடனே காரணத்தை கண்டறிந்து சரிசெய்தால் மகிழ்ச்சி தானே!

error: Content is protected !!