News March 23, 2025
தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 29, 2025
செங்கல்பட்டு: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
News September 29, 2025
செங்கல்பட்டு: கடலில் மூழ்கிய 2 சிறுவர்கள் சடலமாக மீட்பு

மணலி, சி.பி.சி.எல்., நகரைச் சேர்ந்தவர் தருண்குமார்(17) பிளஸ் 2 மாணவர். இவரது நண்பர் இம்மானுவேல்(16) பிளஸ் 1 மாணவர். காலாண்டு விடுமுறை என்பதால் நண்பர்கள் 16 பேருடன் சேர்ந்து, எண்ணுார், பாரதியார் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது இருசிறுவர்கள் கடலில் மூழ்கி மயமாகினர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 29, 2025
செங்கல்பட்டு: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.