News March 23, 2025

தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

image

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்தால் நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News August 26, 2025

காஞ்சிபுரத்தில் பேருந்தில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு…

image

காஞ்சிபுரம் மக்களே, அரசு பேருந்தில் சில்லறை வழங்கவில்லை என்றாலோ, உங்கள் பகுதியில் பேருந்து நிற்காமல் சென்றாலோ, பேருந்து கால தாமதமாக வருகிறது என்றாலோ, நடத்துனர் மரியாதை குறைவாக நடத்தினாலோ, உங்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டாலோ (அ) லக்கேஜை பேருந்தில் மறந்து விட்டாலோ இனி கவலை வேண்டாம். இந்த எண்ணில் (1800 599 1500) உங்கள் குறைகளை புகார் செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News August 26, 2025

காஞ்சிபுரத்தில் அரசு சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில்!

image

காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெறும் இடங்கள். மிலிட்டரி ரோடு தனலட்சுமி திருமண மண்டபம், குன்றத்தூர் நகராட்சி முருகன் கோயில் ரோடு ராமச்சந்திரா மஹால், காவனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், வாலாஜாபாத் வாரணவாசி SL நாதன் திருமண மண்டபம் , காஞ்சிபுரம் கீழம்பி ஊராட்சி மன்ற அலுவலகம், கொல்லச்சேரி குன்றத்தூர் மெயின் ரோடு, ஏ.பி.எஸ் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. ஷேர்!

News August 26, 2025

தனியார் வங்கி நிர்வாகியை தாக்கியவர் கைது

image

காஞ்சிபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 25) தனியார் நிதி நிறுவன வங்கி அதிகாரியை கத்தியால் குத்திய வழக்கில் குணா என்ற நபரை காவல்துறை கைது செய்தனர். வீடு கட்டுவதற்காக பெற்ற கடனை செலுத்த தவறிய நிலையில், கடனை திரும்ப செலுத்த சொல்லி தொடர்ந்து குணாவை நிதி நிறுவன ஊழியர் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குணா அவரை கத்தியால் குத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!