News March 23, 2025

கண்மாயில் தவறி விழுந்து ஒருவர் பலி

image

திருவாடானை, கோடனுாரை சேர்ந்தவர் மகாலிங்கம்(47). நேற்று முன்தினம் முதல் மகாலிங்கத்தை காணாமல் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கண்மாய் நீரில் மகாலிங்கம் தலையில் அணிந்திருந்த தொப்பி மிதந்ததுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மகாலிங்கம் உடலை மீட்டனர். கண்மாயில் கை, கால் கழுவ சென்ற போது தவறி விழுந்து அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News

News March 29, 2025

429 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் இன்று (மார்ச்.23) காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் மக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 29, 2025

பாம்பன் பாலத்தில் நாளை திறப்பு விழா ஒத்திகை

image

பாம்பனில் புதிய ரயில் பாலத்திற்கான திறப்பு விழா ஒத்திகை நாளை மார்ச்.29 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. எனவே அப்பகுதியில் படகுகள் பாலத்தை கடக்க வேண்டாம் எனவும் ஒத்திகை நடைபெறும் போது ஆற்றுப் பகுதியில் படகுகளை நிறுத்தி வைக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது மீன்வளத்துறை ரயில்வே மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2025

ராமநாதபுர மாவட்ட இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (மார்ச்.28) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!