News March 23, 2025

3 மாதங்களில் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்!

image

TNல் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் 4 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தெருவில் நடக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள் மக்களே!

Similar News

News March 29, 2025

IPL 2025யை ‘இந்த’ அணி வெல்லும்! ஐஐடி பாபா கணிப்பு!

image

மகாகும்பமேளாவில் தோன்றி, IIT பாபா திடீரென வைரலாகினார். இவர், IPL 2025 தொடரை RCB அணி தான் வெல்லும் என கணித்துள்ளார். தொடரை வெல்லும் எனக் கூறியும் RCB ரசிகர்கள் புலம்பி தவிக்கின்றனர். விஷயம் என்னவென்றால், IIT பாபா CT தொடரில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தும் எனக் கணித்தார். ஆனால், அத்தொடரில் பாகிஸ்தான் ரொம்ப மோசமாக தோற்றது. அது ஞாபகம் வர, தற்போது RCB ரசிகர்கள் தவிக்கிறார்கள். யார் ஜெயிக்க போறாங்க?

News March 29, 2025

என்கவுன்டரில் 15 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

image

சத்தீஸ்கரில் இன்று அதிகாலை நடந்த தேடுதல் வேட்டையில் 15 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மா – தண்டேவாடா எல்லையில் உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக சுக்மா மாவட்ட எஸ்.பி. கிரண் சவான் தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 22 பேர் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.

News March 29, 2025

போதைக்கு அடிமையாகி Suicide செய்யும் இளைஞர்கள்

image

மாநிலத்தில் எந்த பக்கம் பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் இருப்பதால், பல ஆண்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துகின்றனர். குறிப்பாக, வயது வித்தியாசம் இல்லாமல் குடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் இளம் வயதினர் போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாக மன நல மருத்துவ சங்கத்தின் EX தலைவர் பன்னீர் செல்வம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!