News March 23, 2025
ஏர் இந்தியாவை திட்டி தீர்த்த வார்னர்!

ஆஸி. கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஏர் இந்தியா நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘விமானி இல்லாத போது, விமானத்தில் பயணிகளை ஏற்றி மணிக்கணக்கில் காக்க வைப்பது ஏன் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டேக் செய்து அவர் கேள்வியை எழுப்பியுள்ளார். அவரின் பதிவு வைரலாக, பெங்களூருவின் மோசமான வானிலை காரணமாக, விமானம் நிறுத்தி வைக்கப்பட்டதாக ஏர் இந்தியா அவருக்கு பதிலளித்துள்ளது.
Similar News
News March 29, 2025
இந்திய ராணுவத்தில் இணையும் ‘பறக்கும் எமன்’!

முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் ‘ப்ரச்சந்த்’ எனும் அதிநவீன போர் ஹெலிகாப்டர்கள், விரைவில் இந்திய ராணுவத்தில் சேரவுள்ளன. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்று வழங்கியது. ரூ.62,700 கோடி செலவில் மொத்தம் 156 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கவுள்ளது. 5.8 டன் எடையும், 16,400 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை அருகே நிலைநிறுத்தப்படவுள்ளன.
News March 29, 2025
வள்ளலார் பொன்மொழிகள்

*நாம் பிறருக்கு உதவுவதால் நாம் இழக்க போவது எதுவுமில்லை. அதனால் நாம் பெறும் இன்பம் இரண்டு மடங்காகும். *மனதை அடக்க நினைத்தால் அடங்காது. அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான். இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான். *அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை. உண்மையைச் சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். *சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன.
News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.