News March 23, 2025

போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்?

image

கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸூக்கு ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். எனினும் 2 மாதங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News March 26, 2025

பாஜக – அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு: விஜயதாரணி

image

அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பு குறித்து பேசிய பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான விஜயதாரணி, 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட்டால், மாற்றம் ஏற்படும் எனக் கூறிய அவர், தவெக தலைவர் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் ( பாஜக, அதிமுக உடன்) ஆளும் அரசில் இடம்பெறுவார் எனவும் தெரிவித்தார்.

News March 26, 2025

அரசு ஊழியர்களுக்கு ஏப்.2இல் சம்பளம்: தமிழக அரசு

image

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்.2ஆம் தேதி ஊதியம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏப்.1ஆம் தேதி வருடாந்திர கணக்கை முடிப்பதால் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் சம்பளம் 2ஆம் தேதி வழங்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 9.3 லட்சம் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு, முன்னதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

News March 26, 2025

நடிகர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

image

மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா, உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிகவின் வன்னியரசு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

error: Content is protected !!