News April 1, 2024
கிருஷ்ணகிரி: நீச்சல் பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி முகாம் இன்று ( ஏப்ரல் 1) தொடங்கியது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவின் கீழ், நீச்சல் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி முகாம் இன்று முதல் ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமிற்கு ரூ. 1,770 கட்டணம் ஆகும். மேலும் விவரங்களுக்கு 74017 03487 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
Similar News
News August 14, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 14, 2025
கிருஷ்ணகிரியின் குட்டி இங்கிலாந்து எது தெரியுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள தளி பகுதிக்கு லிட்டில் இங்கிலாந்து என்ற சிறப்பு பெயர் உண்டு. அடர்ந்த வனப்பகுதி மற்றும் குளிர்ந்த இதன் வானிலை இங்கிலாந்தை ஒத்திருப்பதால் ஆங்கிலேயர்கள் தளியை “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைத்து வந்தனர். சிறப்பு பெயருக்கு ஏற்ப குளிர்ந்த சூழலோடு, அறியப்படாத சுற்றுலா தலமாக தளி உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News August 14, 2025
ஓசூர் பகுதியில் பயங்கர விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் அருகே இன்று (ஆகஸ்ட் 14) கோப சமுத்திரம் பகுதியில் உள்ள சாலையில் பெரிய கனரக லாரி ஆனது இரண்டு கார்களின் மீது சாய்ந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.