News March 23, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபத்தில் மரணம்

திருவண்ணாமலை அருகே நேற்று (மார்ச் 22), பிக்கப் வாகனம் சாலை விபத்தில் சிக்கியதில் வாகனத்தில் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பானூர் கிராமத்தில் வசிக்கும் தமிழரசன் என்பவர் நிகழ்விடத்திலேயே இறந்து விட்டார். உடனிருந்த மற்ற இருவரில் தென்னரசு என்பவருக்கு பலத்த காயமும் செந்தில் என்பவருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் சோகமடைந்தனர்.
Similar News
News April 4, 2025
1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <
News April 4, 2025
கிருஷ்ணகிரியில் கார் மோதி ஒருவர் பலி

ஓசூர், தேன்கனிக்கோட்டை அடுத்த பிக்கனப்பள்ளியை சேர்ந்தவர் வீரப்பா, 38, டைலர். இவர் நேற்று முன்தினம் மதியம் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்றுள்ளார். மரக்கட்டா முனியப்பன் கோவில் அருகே, தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி சாலையில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த சுசுகி சென் கார் மோதி பலியானார். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 4, 2025
கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை (ஏப்ரல்.5) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.