News March 23, 2025
சங்கரன்கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரன் நாராயணர் கோவிலில் ஆண்டு தோறும் மார்ச், செப். மாதங்களில் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மூன்று நாட்கள் அதிகாலையில் சூரிய உதயத்தின் போது சூரிய ஒளி மூலவர் மீது விழும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதேபோன்று மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெற்றது. இதனை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். *ஷேர்
Similar News
News September 23, 2025
தென்காசி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25.09.2025 காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் .கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது
News September 23, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று(செப்.22) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News September 22, 2025
தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (23.9.2025) செவ்வாய்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் பின்வரும் இடங்களில் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்செவல் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.