News March 23, 2025
கோலி கணக்கில் இன்னொரு ரெக்கார்ட்

400 டி20 போட்டிகளில் விளையாடிய 3ஆவது இந்திய வீரராக கோலி உருவெடுத்துள்ளார். நேற்றைய KKR உடனான போட்டியின் போது, அவர் இந்த சாதனை படைத்துள்ளார். முன்னதாக ரோஹித் ஷர்மா 448, தினேஷ் கார்த்தி 412 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். அதேபோல், டி20யில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் கோலி 12,945 ரன்களுடன் 5ஆவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 14,562 ரன்களுடன் கெயில் முதலிடத்தில் உள்ளார்.
Similar News
News March 27, 2025
வங்கியில் தங்கம் டெபாசிட் (GMS) திட்டம் நிறுத்தம்!

தங்கத்தை வங்கியில், டெபாசிட் செய்து வட்டி வருமானம் ஈட்டும், தங்க முதலீடு திட்டத்தை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2015இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தபின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, தங்கத்தை முதலீடு செய்திருந்தால், தற்போதைய விதிகளின்படி, அதற்கான காலம் முடியும் வரை பலன்களைப் பெறலாம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
News March 27, 2025
புடின் சீக்கிரம் உயிரிழப்பார்: ஜெலன்ஸ்கி

ரஷ்ய அதிபர் புடின் விரைவில் உயிரிழப்பார், அப்படித்தான் போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். புடினுக்கு நரம்பியல் நோய், கேன்சர் என கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவி வரும் நிலையில், ஜெலன்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்ய அதிபரின் ஆரோக்கியம் சார்ந்த செய்திகளை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
News March 27, 2025
பிரபல நடிகை மரணம்: விலகியது மர்மம்

பிரபல ஹாலிவுட் நடிகை பமிலா பாச் கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருந்துவந்த நிலையில், அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் ஏற்பட்ட காயத்தால் அவர் உயிரிழந்ததாக, மரண சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பே வாட்ச், சைரன்ஸ், நைட் ரைடர் உள்ளிட்ட படங்களில் அவரது கேரக்டர்களால், ரசிகர்களிடையே அவர் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.