News March 23, 2025
சுவிஸ் ஓபனில் தமிழக நட்சத்திரம் தோல்வி

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தமிழக வீரர் சங்கர் சுப்பிரமணியன் தோல்வியடைந்தார். பிரான்சை சேர்ந்த கிறிஸ்டோ போபோவ்வுடன் மோதிய அவர் 21-10, 21-14 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இதற்கு முந்தைய ஆட்டத்தில் உலகின் 2ஆம் நிலை வீரர் அன்டோசனை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்த சங்கர் அங்கு ஜொலிக்க தவறிவிட்டார்.
Similar News
News March 25, 2025
ஜீரோக்களில் ஹீரோ: மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்!

பஞ்சாப் அணியில் விளையாடிவரும் மேக்ஸ்வெல் இன்றைய ஆட்டத்தில் கோல்டன் டக் அவுட் ஆனார். இதன்மூலம், ஐபிஎல் தொடர்களில் அதிகமுறை(19) டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக அவர் மாறியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் மும்பை வீரர் ரோகித் சர்மா (18), முன்னாள் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக்(18) ஆகியோர் உள்ளனர். இந்த சாதனையை யார் முறியடிப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
News March 25, 2025
நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி வேண்டும்: திருமா

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியைப் பின்பற்ற வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மெக்வாலிடம் திருமாவளவன் கோரிக்கை அளித்து வலியுறுத்தினார். 2018 முதல் நியமிக்கப்பட்ட 715 ஐகோர்ட் நீதிபதிகளில், SC- 22, ST- 16, OBC-89, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 37 பேர் மட்டுமே உள்ளதாகவும், இந்த அப்பட்டமான புறக்கணிப்பு பன்முகத் தன்மைக்கு சவாலாக உள்ளதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News March 25, 2025
தொடர் விடுமுறை: குவிந்த கூடுதல் பஸ்கள்!

ரம்ஜான் பண்டிகை வரும் 31ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய சனி, ஞாயிறும் விடுமுறை என்பதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ளனர். இவர்களின் வசதிக்காக, கிளாம்பாக்கத்தில் இருந்து 990 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, கோயம்பேட்டில் இருந்து தி.மலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 100 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.