News March 23, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News March 25, 2025

நீட் முறைகேடு: பார்லிமெண்டில் கேள்வி எழுப்பிய திருமா

image

எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன், 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து நீட் தேர்வுகளிலும் முறைகேடு நடைபெற்றதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். ‘நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சிபிஐ விசாரணை நடத்த மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டது’ என மத்திய இணையமைச்சர் மஜும்தார் பதில் அளித்ததாகவும் திருமா தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

குஜராத் அணிக்கு இதுதான் இலக்கு…!

image

குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை பதம்பார்த்த பஞ்சாப் அணி 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக 97 ரன்கள் குவித்தார். குஜராத் அணி தரப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எந்த அணி வெல்லும்? உங்கள் கணிப்பு என்ன?

News March 25, 2025

நடிகர் மனோஜ் மறைவு: ஸ்டாலின் இரங்கல்

image

நடிகர் மனோஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட மனோஜ், சிறு வயதில் மறைந்தது பேரதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!