News March 23, 2025
IPL 2025: விளம்பரங்கள் மூலம் ரூ.4,500 கோடி ஈட்ட இலக்கு

IPL 2025 கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு உரிமையை ஜியோஸ்டார் பெற்றுள்ளது. இதன்மூலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவிகள், ஜியோஸ்டார் செயலியில் போட்டிகள் நேரலை செய்யப்படவுள்ளது. இந்த போட்டிகளின்போது விளம்பரங்களை ஒளிபரப்ப 32 ஸ்பான்சர்ஸ்களை பெற்றுள்ள ஜியோஸ்டார், அதன்மூலம் ரூ.4,500 கோடி வருவாய் ஈட்டவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த IPLஇல் கிடைத்த ரூ.4,000 கோடியை முந்த முடிவு செய்துள்ளது.
Similar News
News March 25, 2025
மனோஜ் பாரதிராஜா காலமானார்

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். தாஜ் மகால், வருஷமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவர், மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார்.
News March 25, 2025
குஜராத் அணியில் 4 தமிழக வீரர்கள்…!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அந்த அணியின் பிளேயிங் XI-ல், 3 தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். சாய் கிஷோர், சாய் சுதர்சன், ஷாருக் கான் ஆகிய 3 வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்படுபவர்களின் லிஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?
News March 25, 2025
மீண்டும் தலைவர் ஆகிறார் அண்ணாமலை?

தமிழக பாஜக தலைவராக மீண்டும் அண்ணாமலை நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரது பதவிக்காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில், புதிய தலைவரை நியமிக்கும் பணிகளை பாஜக கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில், தேர்தல் நெருங்குவதால், அண்ணாமலையின் தலைவர் பதவியை நீட்டிப்பு செய்ய பாஜக தலைமை திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.