News March 22, 2025
திருமணத்தை பதிவு செய்வது எப்படி? (2/2)

தொடர்ந்து பணத்தை கட்டி, REFERENCE எண் பெற வேண்டும். பிறகு தேர்வு செய்த நேரத்தில் 2 சாட்சிகள், திருமண அழைப்பிதழ், வயது சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். திருமண தம்பதிகள் மட்டும் அனைத்து ஒரிஜினல் சான்றுகளும் வைத்திருப்பது அவசியம். இவை அனைத்தும் சரியாக இருந்தால், உடனே அன்றைய தினத்தில் திருமண பதிவு சான்று அளிக்கப்படும். இல்லையெனில் சில நாட்கள் ஆகும்.
Similar News
News July 9, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 9) சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,000-க்கும், சவரன் ₹72,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.
News July 9, 2025
ரஷ்ய அமைச்சர் தற்கொலை.. விசாரணைக்கு பயந்தாரா?

ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் Roman V. Starovoyt தற்கொலை செய்தது குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சராகும் முன்பு குர்ஸ்க் பிராந்திய ஆளுநராக அவர் பதவி வகித்தார். இந்நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளார். குர்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த நிதிமுறைகேடு குறித்து விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
News July 9, 2025
காரைக்காலில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலில் 4 நாள்கள் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை சப்பர வீதி உலா, மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனால் காரைக்கால் பிராந்தியத்தில் நாளை மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் நாளை அங்கு செயல்படாது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.