News March 22, 2025
துணை முதல்வர் கோவை பயணம் ஒத்திவைப்பு

கோவை மாவட்டத்தில் நாளை (23-03-2025) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், தற்பொழுது தவிர்க்க இயலாத காரணங்களால், இந்த சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 26, 2025
மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் விடுமுறை கால சிறப்பு மலை ரயில் நாளை மறுதினம்(மார்.28) முதல் ஜூலை.6 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், மார்.29 முதல் ஜூலை.7 வரை ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் சனி, திங்கட்கிழமைகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என அறிவித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News March 26, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (26.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 26, 2025
கோவை: 3 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்

காவல் நிலைய பதிவேடுகள் முறையாக பராமரிப்பு, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை, குற்றங்களை கண்டறிதல், தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி கிழக்கு, பொள்ளாச்சி தாலுக்கா, மகாலிங்கபுரம் காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ 9001 : 2015 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கியூசிஐ விருதையும் பெற்றுள்ளன. இவற்றிற்காக டிஎஸ்பி, போலீசார் உள்ளிட்டோரை எஸ்பி கார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.