News March 22, 2025
சரவெடியாய் வெடித்த சால்ட்.. அதிரடி காட்டும் RCB!

கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி, சால்ட் ஆகியோர் வெளுத்து வாங்கினர். பவர்பிளே முழுவதும் பந்துகள் எல்லைக் கோட்டை நோக்கிப் பறந்தன. அதிரடியாக விளையாடிய சால்ட், அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். பவர்பிளேயில் மட்டும் பெங்களூரு அணி 80 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.
Similar News
News September 10, 2025
கள் இறக்க அனுமதி தராது ஏன்? EPSயிடம் விவசாயி கேள்வி

EPS தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. உங்கள் ஆட்சியில், கள் இறக்க அனுமதி தராதது ஏன் என கேட்டு விவசாயி ஒருவர் அதிமுகவினரிடம் வாக்குவாதம் செய்தார். உடனடியாக தலையிட்ட EPS, கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், மக்களுக்கு எது நல்லது என பார்த்துதான் ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும், தனிநபரின் லாப நஷ்டத்தை பார்க்கக்கூடாது என்றும் விளக்கமளித்தார்.
News September 10, 2025
BREAKING: விடுமுறை.. செப்.12 முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

வார விடுமுறையில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு நெரிசலின்றி செல்ல ஏதுவாக சுமார் 1,000 ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, செப்.12, 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்தும், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.
News September 10, 2025
iPhone 17 PRO: இந்தியாவை விட USA-ல் ₹38,000 குறைவு!

ஐபோன் 17 சீரிஸ்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. இந்த போன்களின் விலை நாடுகளுக்கு ஏற்றார்போல் மாறுபடுகிறது. இந்தியாவில் iPhone 17 PRO-ன் விலை ₹1,34,900 ஆக இருக்கும் நிலையில், USA-ல் ₹96,870 ($1099), UAE-ல் ₹1,12,923 (AED 4,699), ஜப்பானில் ₹1,07,564 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன்கள் தயாராகும் நிலையில், விலையில் இவ்வளவு வித்தியாசம் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும்?