News March 22, 2025
ஆக்ரோஷத்துடன் கமல் – சிம்பு!! வெளியான புது போஸ்டர்

நாயகனுக்கு பின் கமலும் மணிரத்னமும் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளதால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படத்தில் சிம்புவும் நடித்திருப்பது கூடுதல் பலம் சேர்த்துள்ளது. படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. தற்போது படத்தின் புது போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கமல் மற்று சிம்புவின் ஆக்ரோஷமான புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
Similar News
News March 25, 2025
ஹூசைனி மறைவிற்கு பவன் கல்யாண் இரங்கல்!

பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் பதிவில், அவரிடம் தான் கராத்தே பயிற்சி பெற்ற நினைவுகளை பவன் கல்யாண் பகிர்ந்து கொண்டுள்ளார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணியளவில் ஹுசைனி காலமானார். அவருக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
News March 25, 2025
டிவியில் 1500 முறை ஒளிபரப்பான மகேஷ் பாபு படம்..!

நம்மூரில் மைனா, துப்பாக்கி படங்களை அடிக்கடி டிவியில் போட்டதற்கே டென்ஷனானவர்கள் அதிகம். ஆனால், தெலுங்கில் ‘அத்தடு’ என்ற படத்தை ஒரே சேனலில் 1500 முறை ஒளிபரப்பி உள்ளனர். 2005ல் வெளியான மகேஷ் பாபுவின் இந்த படம், அந்த ஊர் மக்களுக்கு அவ்வளவு பிடிக்கும் போல. இத்தகவலை Siasat ஊடகம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் TRP நன்றாகவே வந்துள்ளதாம். இந்த ரெக்கார்டை நம் ஊரில் எந்தப் படமாவது பிரேக் பண்ணுமா?
News March 25, 2025
BIG BREAKING: உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிப்பு

நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் மே மாதம் நடத்தப்படவுள்ளது. மொத்தம் காலியாகவுள்ள 448 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் தொடங்கியுள்ளன. சென்னையில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.