News March 22, 2025

ஆர்சிபிக்கு இதுலயும் சோகம்தான்

image

18வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முந்தைய போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது கொல்கத்தா அணிதான். இதுவரை 34 போட்டிகளில் ஒன்றாக விளையாடிய நிலையில், 20 போட்டிகளில் கொல்கத்தா அணியும், 14 போட்டிகளில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. இன்று போட்டியில் வெல்லப்போவது யார்? கமெண்ட் பண்ணுங்க

Similar News

News March 25, 2025

டிவியில் 1500 முறை ஒளிபரப்பான மகேஷ் பாபு படம்..!

image

நம்மூரில் மைனா, துப்பாக்கி படங்களை அடிக்கடி டிவியில் போட்டதற்கே டென்ஷனானவர்கள் அதிகம். ஆனால், தெலுங்கில் ‘அத்தடு’ என்ற படத்தை ஒரே சேனலில் 1500 முறை ஒளிபரப்பி உள்ளனர். 2005ல் வெளியான மகேஷ் பாபுவின் இந்த படம், அந்த ஊர் மக்களுக்கு அவ்வளவு பிடிக்கும் போல. இத்தகவலை Siasat ஊடகம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் TRP நன்றாகவே வந்துள்ளதாம். இந்த ரெக்கார்டை நம் ஊரில் எந்தப் படமாவது பிரேக் பண்ணுமா?

News March 25, 2025

BIG BREAKING: உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிப்பு

image

நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் மே மாதம் நடத்தப்படவுள்ளது. மொத்தம் காலியாகவுள்ள 448 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் தொடங்கியுள்ளன. சென்னையில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.

News March 25, 2025

கோர விபத்து.. நடிகர் மனைவி படுகாயம்

image

பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனைவி சோனாலி சாலை விபத்தில் படுகாயமடைந்தார். மும்பை- நாக்பூர் நெடுஞ்சாலையில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்த முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும், கொரோனா காலத்தில் மக்களுக்கு நல உதவிகளை செய்த ஹீரோ சோனுவின் குடும்பத்திற்கா இப்படி என ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!