News March 22, 2025
பாலிவுட் நடிகர் ராகேஷ் பாண்டே காலமானார்

மூத்த ஹிந்தி, போஜ்பூரி நடிகர் ராகேஷ் பாண்டே (77) காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மும்பையின் ஜூஹூவில் உள்ள ஹாஸ்பிடலில் ICU-வில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 1969ம் ஆண்டு வெளியான சாரா ஆகாஸ் படம் மூலம் அவர் திரைத்துறையில் அறிமுகமானார். இப்படத்தில் நடித்ததற்காக குடியரசுத் தலைவர் விருதும் பெற்றார். ஹிந்தியில் தேவ்தாஸ், லட்சயா, பிளாக் படங்களிலும் நடித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
திமுகவில் இணைந்த 1 கோடி பேர் ஒன்றாக உறுதிமொழி

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வாக்குசாவடிதோறும் 30% வாக்காளர்களை கட்சி உறுப்பினர்களாக்கும் திட்டத்தை திமுக நடத்தி வருகிறது. இதற்காக, கூவி, கூவி ஆட்களை சேர்ப்பதாக திமுக மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் செப்.15-ல் உறுதிமொழி ஏற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
அதிமுக ஆட்சிக்கு வராது: டிடிவி தினகரன்

EPS பொதுச்செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக உடைந்து கிடப்பதாக உதயநிதி கூறும் கருத்துகள் சரிதான் என கூறிய அவர், தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியடைய EPS தான் காரணம் என சாடியுள்ளார். மேலும், செங்கோட்டையன் முயற்சிக்கு தான் முழு ஆதரவாக இருப்பேன் எனவும் மதுரையில் பேட்டியளித்துள்ளார். டிடிவி தினகரனின் பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?
News September 11, 2025
பாமகவில் அடுத்தது என்ன நடக்கும்?

PMK-வில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கியுள்ள நிலையில், அடுத்தது என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே ECI நடைமுறை படி தானே பாமக தலைவர் என கூறியுள்ளதால், இந்த நீக்கத்தை அவரது தரப்பினர் ஏற்க மறுப்பார்கள். மேலும் கட்சியின் சின்னம், பெயர் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அதனை உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்ற வாய்ப்புள்ளது.