News March 22, 2025
யாரை கண்டும் எங்களுக்கு பயமில்லை: செல்லூர் ராஜூ

அதிமுக யாருக்கும் எப்போதும் பயப்பட்டதில்லை என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுகவை மற்றவர்கள் இயக்குகிறார்கள் என்ற அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், அதிமுகவுக்கு தாங்களே எஜமானர்கள், வேறு யாரும் இல்லை என்றார். அதிமுகவை ஆளும் கட்சியாக மாற்றுவதற்கும், இபிஎஸ்ஸை முதல்வர் ஆக்குவதற்கும் யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்களோடு கூட்டணி வைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 25, 2025
போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு: பெண்களுக்கு சூப்பர் சலுகை!

மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் 40% வரை பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை, தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பெண்கள் குறைந்தது ₹1,000ல் இருந்து ₹2 லட்சம் வரை FD ஆக முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 7.5% நிலையான வட்டி; அதுவும் காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு வழங்கப்படும். FDல் உள்ள பணத்தை 40% வரை எடுத்துக்கொள்ளலாம், மார்ச் 31க்கு முன் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும்.
News March 25, 2025
பயங்கர நிலநடுக்கம்

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7ஆக பதிவாகியுள்ளது. இதனால், பல்வேறு நகரங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலையில் தஞ்சம் புகுந்தனர். இதன் பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேபோல், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
News March 25, 2025
கோடையை சமாளிக்க சென்னையில் ஏசி ரயில்!

வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து சென்னையில் ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், ஆபீஸ் செல்பவர்கள் வசதிக்காக சென்னையில் மின்சார ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கடற்கரை – செங்கல்பட்டு இடையே 2 சேவைகளும், தாம்பரம் – கடற்கரை இடையே ஒரு சேவையும் இயக்கப்படவுள்ளது.