News March 22, 2025

கோவையில் போக்குவரத்து மாற்றம் 

image

சேலம் – கொச்சின் சாலை ஒட்டியுள்ள மரப்பாலத்தில் அமைந்துள்ள, ரயில்வே கீழ் பாலத்தை, திரும்பக்கட்டும் பணி நடைபெற்று வருவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து க.கா. சாவடி, வாளையாறு மற்றும் பாலக்காடு செல்லும் கனரக வாகனங்கள், ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து, இடது புறம் திரும்பி, கற்பகம் காலேஜ் சந்திப்பில் செல்ல வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளனர்.

Similar News

News March 24, 2025

தண்ணி லாரி, டிராக்டர் உரிமையாளர்கள் கவனத்திற்கு

image

கோவையில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பிக் கொடுக்க, மேல்நிலைத்தொட்டிகள் கட்டி, 24 மணி நேரமும் அரசு அனுமதிக்கும் கட்டணத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து தண்ணீர் லாரி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் தங்களது விபரங்கள் மற்றும் நாளொன்றுக்கு தேவையான தண்ணீர் விபரத்தை, cityengineer.coimbatore@gmail.com, Whatsapp No: 99440-64948 வாயிலாக தெரிவிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News March 24, 2025

போஸ்ட் ஆபீஸ் வேலை: நீங்க பாஸா

image

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <>இங்கு கிளிக் செய்க.<<>> இதில் ஊதியம் ரூ.12,000 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும். ( SHARE பண்ணுங்க)

News March 24, 2025

ஹெல்மெட் போட்டாதான் அனுமதி

image

கோவை கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழையும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. கோவை அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் மனு அளிக்க இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!