News March 22, 2025
இந்தியாவின் அதிவேக ரயில் எது தெரியுமா?

இந்தியாவிலேயே அதிவேகமாக செல்லும் ரயில் எது தெரியுமா? தேஜஸ்தான். முதன் முதலாக 2017ல் அறிமுகமான தேஜஸ் மும்பையில் இருந்து கோவா வரையிலான 552 கி.மீ தூரத்தை 8 மணி 30 நிமிடங்களில் கடந்தது. 2019ல் தமிழகத்தில் அறிமுகமான தேஜஸ் ரயில் எழும்பூரில் இருந்து மதுரைக்கு 6 மணி 30 நிமிடங்களில் சென்றடைந்தது. அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கி.மீ. ஆனால், தண்டவாள கட்டுப்பாட்டால் 130 கி.மீ வேகத்திலேயே இயக்கப்படுகிறது.
Similar News
News March 25, 2025
புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுமா?: முதல்வா் விளக்கம்

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுமா என்பது குறித்து பேரவையில் கேட்கப்பட்டதற்கு, முதல்வா் விளக்கம் அளித்தாா். புதுவை உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பரிந்துரைக்க, நீதிபதி சசிதரன் ஆணையத்தை அரசு நியமித்துள்ளது. அதன்படி, ஆணையம் பரிந்துரையை அளித்த பின், உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
News March 25, 2025
IPL: இன்று பஞ்சாப் VS குஜராத் மோதல்

IPL தொடரில் இன்று GT – PBKS அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. IPL வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், GT 3 முறையும், PBKS 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த சீசனில் KKR அணிக்காக கோப்பை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர், இந்த சீசனில் PBKS அணியின் கேப்டனாக உள்ளார். கில் GTயின் கேப்டனாக உள்ளார்.
News March 25, 2025
உங்களை வெற்றியாளராக மாற்றும் ‘6’ பழக்கங்கள்..!

ஒருவரிடம் இருக்கும் சில பழக்க வழக்கங்கள் தான் அவரை வெற்றியாளராக மாற்றுகிறது *என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனை கொண்டி இருப்பார்கள் *குறை சொல்பவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள் *வாழ்வில் அவ்வப்போது ரிஸ்க் எடுப்பார்கள் *எடுத்த காரியத்தில் பின்வாங்க மாட்டார்கள் *ஒரு விஷயத்தை தள்ளிப்போடும் பழக்கம் இருக்காது *உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவார்கள். நீங்களும் ஃபாலோ பண்ணுங்க!!