News March 22, 2025
‘BIG BOSS’ எண்ணம் எங்களிடம் எடுபடாது: கே.டி.ராமா ராவ்

மத்திய அரசு BIG BROTHER-ஆக செயல்பட வேண்டும் தவிர BIG BOSS-ஆக செயல்படக் கூடாது என பிஆர்எஸ் கட்சி தலைவர் கே.டி.ராமா ராவ் கூறியுள்ளார். தொகுதி மறுவரை தொடர்பாக இப்போது ஏன் பேசுகிறீர்கள் என சிலர் கேள்வி எழுப்புவதாகவும், இப்போது இந்த பிரச்னையை பேசவில்லை என்றால் வரலாறு தங்களை மன்னிக்காது என்றும் தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களின் உரிமை பறிபோவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 28, 2025
வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

வரும் ஏப்ரலில் தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை வருகிறது. ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி, பின்வரும் நாள்களில் வங்கிகள் செயல்படாது: ஏப்.6 (ஞாயிறு, ராமநவமி), ஏப்.10 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.12, 2-ம் சனி, ஏப்.14 (தமிழ் புத்தாண்டு, விஷு), ஏப்.18 (புனித வெள்ளி), ஏப்.26 4-ம் சனி, ஏப்.13, 20, 27 – ஞாயிறு. இந்த தேதிகள் அடிப்படையில் உங்கள் வங்கிப் பணிகள், பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
News March 28, 2025
புலியிடம் வம்பிழுக்கும் ‘ஆடு’: ஆதவ் கிண்டல்

தவெக கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். திமுகவுக்கு எதிராக பிரச்னைகள் கிளம்பும்போது, அதை திசைதிருப்புவதே அண்ணாமலையின் வேலை என அவர் கூறினார். மேலும், நமது தலைவர் (விஜய்) புலியை போல அமைதியாக இருக்க, திடீரென ஒரு ஆடு வந்து ஆட்டம் போடுவதாகவும், நமது தலைவரை விமர்சிக்கும் பெயரில், மறைமுகமாக ஒரு பெண்ணை கேவலமாக பேசுகிறது அந்த ஆடு எனவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
News March 28, 2025
சு.வெங்கடேசனுக்கு ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் <<15911227>>தந்தை<<>>மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இச்செய்தியைக் கேட்டவுடன் வருத்தமடைந்ததாக x தளத்தில் பதிவிட்டுள்ள அவர், குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.