News March 22, 2025
திமுக அரசு திணறி வருகிறது: அன்புமணி

கொலை, கொள்ளையை தடுக்க முடியாமல் திமுக அரசு திணறி வருவதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் 6,597 படுகொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் உண்மைக்கு மாறாக குற்றங்கள் குறைந்துள்ளதாக முதல்வர் கூறுவது முற்றிலும் தவறானது என்றும் அவர் விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால், கொலைகள் குறைந்திருக்கும், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 26, 2025
நிதி நிலுவை: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தில் ₹4,034 கோடியை வழங்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சிப்பதாக கூறி திமுக சார்பில் வரும் மார்ச் 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அனைத்து ஒன்றியங்களிலும் தலா 2 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்கும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
News March 26, 2025
இனி டிஜிட்டல் மார்க்கெட்டிங் செலவு குறையுமா?

கூகுள், அமேசான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும், டிஜிட்டல் விளம்பர சேவைகளுக்கான 6% வரியை இந்தியா நீக்கவுள்ளது. இது வரும் ஏப்.1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. USA இடையேயான வர்த்தக பதற்றத்தை தணிக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வரிச்சுமையால் இந்திய நிறுவனங்களின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செலவுகள் அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது.
News March 26, 2025
மதுரை மண்ணில் ஹுசைனி உடல் அடக்கம்

புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஹுசைனியின் உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள உறவினர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், காஜிமார் தெரு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.