News March 22, 2025
சித்தராமையா பங்கேற்காதது ஏன்?

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பங்கேற்கவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் அவருக்கு உடன்பாடு எதுவும் இல்லையா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் பங்கேற்காதது ஏன் என்பதற்கான விடை கிடைத்துள்ளது. இதுகுறித்து டி.கே.சிவக்குமார், காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே சித்தராமையாவால் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என விளக்கமளித்துள்ளார்.
Similar News
News March 24, 2025
திமுகவை மீண்டும் சீண்டிய சிபிஎம் மாநில தலைவர்

கடந்த சில மாதங்களாகவே திமுக மீதான விமர்சனங்களை CPM மாநில தலைவர் சண்முகம் தொடர்ந்து வைத்து வருகிறார். அந்த வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நிதி நிலையை அரசு காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார். மேலும், நெல்லையில் சாதிய மோதல் இல்லை என சபாநாயகர் அப்பாவு சொல்வது உண்மைக்கு புறம்பானது எனவும் விமர்சித்துள்ளார்.
News March 24, 2025
இந்தியாவின் உயரமான கட்டடம் எது தெரியுமா?

உலகின் உயரமான கட்டடம் எதுவென்று கேட்டால், கண்ணை மூடிக் கொண்டு துபாய் புர்ஜ் கலிஃபா என்று சொல்லி விடுவோம். அதன் உயரம் 2,717 அடி. இந்தியாவின் உயரமான கட்டடம் எங்கு இருக்கிறது தெரியுமா? மும்பை பலாய்ஸ் ராயல் டவர்தான் அது. 2018ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடம், 1,050 அடி உயரத்தில் 88 தளங்களை கொண்டதாகும். இந்த பில்டிங் மேல இருந்து இன்னைக்கு குதிச்சா, நாளைக்குத்தான் கீழ வந்து சேருவோம் போல!
News March 24, 2025
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு

ஜூலை 14ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இதற்கு முன் 2012ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரோப் கார் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட (₹26 கோடி) அதிக செலவு ஆவதால் (₹32 கோடி) விரைவில் கூடுதல் நிதி ஒதுக்கி திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.