News March 22, 2025

திமுக கொடிக்கம்பங்களை அகற்றுங்க: அமைச்சர்

image

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன் மற்றும் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் செய்தி துறை அமைச்சருமான சாமிநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாலை ஓரங்களில் திமுக கழக கொடிகளை அகற்ற வேண்டும் என தலைமைக் கழகம் அறிவித்தது அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

Similar News

News April 18, 2025

திருப்பூர்: கடன் தொல்லையால் தற்கொலை

image

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி மகன் தங்கராஜ். இவர் கடந்த 8 வருடங்களாக திருப்பூர்,வெள்ளகோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் வீட்டின் அருகில் மளிகை கடையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக, கடன் தொல்லையால், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கை விரக்தியடைந்த தங்கராஜ், நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 17, 2025

கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவில் மாவட்ட அளவிலான 21நாட்கள் இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம்
நடக்கிறது. 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள், வருகிற 24ம் தேதி, மாலை 6 மணி வரை மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில், பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை
கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

திருப்பூர்: கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய எண்கள்!

image

▶️திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971137/38/40. ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100. ▶️விபத்து அவசர வாகன உதவி 102. ▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098. ▶️பெண்கள் உதவி எண் 181. ▶️பேரிடர் கால உதவி1077. ▶️கிராம ஊராட்சி குறை தீர் கட்டுப்பாட்டு அறை 0421 – 2971163, 1800 425 7023. ▶️சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!