News March 22, 2025
பெண்கள்,குழந்தை வன்முறை : முக்கிய அறிவிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் பற்றி புகார் தெரிவிக்க எந்த நேரத்திலும் அழைக்கவும். பெண்களுக்கான உதவி எண்கள் 181 மற்றும் 1091 அழைக்க கூறியுள்ளது.
Similar News
News April 13, 2025
மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஸ்பெஷல் ஆப்பரேஷன்

தமிழக காவல்துறை இயக்குனர் அறிவுறுத்தலின் படி தமிழகம் முழுவதும் வார இறுதி நாட்களில் ஸ்பெஷல் ஆப்ரேஷன் என்ற நடவடிக்கையில் அதிரடி வாகன சோதனைகளை செய்ய அறிவுறுத்தியதின்படி, இன்று இரவு மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில், திருச்சி மாநகரில் மிக முக்கிய 38 சந்திப்புகளில் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் திடீர் ஸ்பெஷல் கார்ப்பரேஷன் செய்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
News April 13, 2025
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில்

திருச்சியில் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் அம்மனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். அம்மனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
News April 13, 2025
திருச்சியில் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

தமிழ்நாடு முழுவதும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாநகர் பாலக்கரை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் ரஞ்சித் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.