News March 22, 2025
மாநிலம் முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம்!

மாநிலம் முழுவதும் நாளை (மார்ச் 23) ‘கிராம சபைக் கூட்டம்’ நடத்தத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக தண்ணீர் தினத்தையொட்டி நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், தண்ணீரின் அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு ஆகியவை தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றி ‘நம்ம கிராம சபை’ செயலியில் பதிவிட உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 24, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3ஆவது நாளாகக் குறைந்துள்ளது. இன்று (மார்ச் 24) சவரனுக்கு ₹120 குறைந்துள்ளதால் 22 கேரட் ஒரு கிராம் ₹8,215க்கும், சவரன் ₹65,720க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் சவரனுக்கு ₹760 குறைந்துள்ளது. அதேநேரம் வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ₹110க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News March 24, 2025
அனைத்துக்கட்சிகளுடன் EC இன்று ஆலோசனை

TNல் தேர்தல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக, அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், ஒரே நபர் 2 வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பது, இறந்தவர்களின் பெயர் நீக்காதது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்கின்றன.
News March 24, 2025
வெயில்.. மக்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாள்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று IMD எச்சரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இன்று இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என்பதால், நண்பகல் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே சென்றால், குடை மற்றும் தொப்பிகளை பயன்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.