News March 22, 2025
தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது கடந்த 2 நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி இருந்து விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உப்பு வயல்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 24, 2025
தூத்துக்குடியில் ஒரு சின்ன கோவா! உங்களுக்கு தெரியுமா?

தூத்துக்குடியில் T.சவேரியார்புரம் தான் “சின்ன கோவா” என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள கட்டிடக்கலை & வாழ்க்கை முறை பழமை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இங்குள்ள புனித சவேரியார் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு புனித சவேரியாரின் விரல் ஒன்று பாதுகாக்கப்படுகிறது. மீனவர்கள், கடல் தொழில் மற்றும் விவசாயம் சிறக்க, புனித சவேரியாரை வழிபடுகின்றனர். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE.
News August 24, 2025
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் மதுரை எம்பி சிறப்புரை

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா நிகழ்வில் நேற்று முதல் நாள் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடியைச் சேர்ந்த பழம்பெரும் எழுத்தாளர் அய்கோ தமிழர் வழிபாட்டு மரபு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் மதுரை எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News August 24, 2025
தூத்துக்குடி எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தந்த கலெக்டர்

தூத்துக்குடியில் 6-ம் ஆண்டு புத்தகத்தில் விழா கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அந்த அரங்கத்தில் தனியாக ஒரு அரங்கு ஏற்பாடு செய்து அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.