News March 22, 2025
ஒன்றாக போராடுவோம்: ஸ்டாலினிடம் ரேவந்த் உறுதி

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே, தொகுதி மறுவரையறை என்று, தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக போராடுவோம் என அழைப்பு விடுத்த அவர், BJP நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்றார்.
Similar News
News September 14, 2025
உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்..!

அவசர அவசரமாக உணவை சாப்பிடக் கூடாது, அப்படி செய்தால் செரிமான பிரச்னை ஏற்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர். சாப்பாட்டிற்கு குறைந்த நேரமே செலவிட்டால், உங்களது உடல் எடை அதிகரிக்கலாம் என எச்சரிக்கின்றனர். நன்றாக மெல்லாமல் வேகமாக சாப்பிடுவது, நீங்கள் அதிகமாக சாப்பிட்டது போன்ற உணர்வை கொடுக்குமாம். உண்பதற்கு அரை மணி நேரம் வரை எடுத்துக் கொண்டால் அனைத்து சத்துகளும் உடலுக்கு கிடைக்குமாம். SHARE IT.
News September 14, 2025
ITR தாக்கல் செய்ய நாளை கடைசி

2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு ITR தாக்கல் செய்ய நாளையுடன் அவகாசம் முடிகிறது. வழக்கமாக ஜூலை 31-ம் தேதியுடன் கணக்கு தாக்கல் நிறைவடையும் நிலையில் இம்முறை அவகாசம் செப்.15 வரை நீட்டிக்கப்பட்டது. நாளைக்குள் கணக்கு தாக்கல் செய்ய தவறினால் அபராதம் செலுத்த நேரிடும். இந்நிலையில், இம்முறை 6 கோடிக்கும் அதிகமானோர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
News September 14, 2025
நல்லகண்ணு விரைவில் டிஸ்சார்ஜ்: மருத்துவ குழு

CPI மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ராஜீவ் காந்தி ஹாஸ்பிடல் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி வீட்டில் தடுமாறி விழுந்து தலையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அவரை 24 மணிநேரமும் டாக்டர்கள் குழு கண்காணித்து வருவதாகவும், தற்போது இயற்கையான முறையில் சுவாசித்து வரும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளனர்.