News March 22, 2025
சுந்தர்.சி – நயன்தாரா மோதல்?

பொள்ளாச்சியில் நேற்று நடந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது, உதவி இயக்குநர் ஒருவரை நயன்தாரா திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் டென்ஷனான சுந்தர்.சி, ஷூட்டிங்கை ரத்து செய்ததோடு, நயன்தாராவுக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க முடிவு எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்ததால், பிரச்னை முடிவுக்கு வந்ததாம்.
Similar News
News March 23, 2025
டிவி பார்த்தால் வாழ்நாள் குறையும்… எச்சரிக்கை!

தினமும் 1 மணி நேரம் டிவி பார்த்தால் மனிதர்களின் ஆயுள்காலம் 22 நிமிடங்கள் குறையும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் தொடர்ந்து 6 மணி நேரம் டிவி பார்ப்பவர்கள், டிவி பார்க்காதவர்களைவிட 5 ஆண்டுகள் குறைவாக வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே ஒரே இடத்தில் உட்கார்ந்து டிவி பார்ப்பதை விட, உடற்பயிற்சி உள்ளிட்ட உடல் உழைப்பு தரும் பணிகளைச் செய்ய டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News March 23, 2025
ஆக்ஷன் நிறைந்த சிக்கந்தர்.. ARM கதைகளம் என்ன?

ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான்கான் கூட்டணியில் உருவாகியுள்ள சிக்கந்தர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 3.37 நிமிடங்கள் நீளம் கொண்ட ட்ரெய்லரில் ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் என அனைத்து அம்சங்களும் கொண்ட கலவையாக உள்ளது. படம் சமூக கருத்தை கையில் எடுத்திருப்பதை காட்சிகள் உணர்த்துகின்றன. படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் மார்ச் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.
News March 23, 2025
நாட்டின் சிறந்த விவசாய விஞ்ஞானி காலமானார்

நாட்டின் தலைசிறந்த விவசாய – தோட்டக்கலை விஞ்ஞானிகளில் ஒருவரான கிருஷ்ணலால் சத்தா (88) உடல்நலக் குறைவால் காலமானார். பத்மஸ்ரீ விருதுபெற்ற இவர் விவசாயம் தொடர்பாக 30-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தேசிய விவசாய ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய இவர் திட்ட கமிஷன், தேசிய பாமாயில் சாகுபடி கமிட்டி, ஆர்கானிக் பொருட்களுக்கான தேசிய வழிகாட்டுதல் குழு எனப் பல்வேறு அமைப்புகள் மூலம் பங்காற்றியுள்ளார். RIP