News March 22, 2025
புதிய IPL RULES

மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான IPL இன்று தொடங்கும் நிலையில், அதன் RULES குறித்து பார்ப்போம். ➤IPL தொடரில் இம்முறை, பந்தில் எச்சில் பயன்படுத்த அனுமதி ➤கூடுதலாக ஒரு மாற்று வீரரை களமிறக்கும் இம்பேக்ட் விதி தொடரும் ➤11 ஓவரில் வேறு பந்தை மாற்றிக்கொள்ளலாம், புதிய பந்துக்கு அனுமதியில்லை ➤அணிகள் தாமதமாக பந்து வீசினால் கேப்டன்களுக்கு தடை விதிக்கப்படாது; தகுதி இழப்பு புள்ளி, அபராதம் மட்டும் விதிக்கப்படும்.
Similar News
News March 24, 2025
ராசி பலன்கள் (24.03.2025)

➤மேஷம் – நற்செயல் ➤ரிஷபம் – எதிர்ப்பு ➤மிதுனம் – வெற்றி ➤கடகம் – கவலை ➤சிம்மம் – பாராட்டு ➤கன்னி – நன்மை ➤துலாம் – தடங்கல் ➤விருச்சிகம் – கவலை ➤தனுசு – தாமதம் ➤மகரம் – மேன்மை ➤கும்பம் – வரவு ➤மீனம் – முயற்சி.
News March 24, 2025
MI அணியை வீழ்த்தி CSK அபாரம்…!

MI அணியை எளிதில் வீழ்த்தி 18வது ஐபிஎல் சீசனை CSK அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது. முதலில் பேட்டிங் செய்த MI அணியில் ரோஹித்(0), கேப்டன் சூர்யகுமார் யாதவ்(29), திலக் வர்மா(31) உட்பட முன்னணி வீரர்கள் அனைவரும் பெரியளவில் சோபிக்க தவறினர். CSK வீரர் நூர் முகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 156 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய CSK அணி, ருதுராஜ், ரச்சினின் அரை சதத்தால் வெற்றி பெற்றது.
News March 24, 2025
டிராஃபிக் போலீசுக்கு இனி வெயில் பிரச்னை இல்லை!

சம்மர் தொடங்கியுள்ள நிலையில் வேகாத வெயிலில் படாத பாடுபடும் டிராஃபிக் போலீசுக்காக சென்னை ஆவடியில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெயிலில் வேலை பார்க்கும் அவர்களுக்கு ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 850 கிராம் எடையுள்ள இந்த ஹெல்மெட்டின் மதிப்பு ரூ.20,000 ஆகும். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரத்திற்கு வேலை செய்யுமாம். சூப்பர்ல!