News March 22, 2025

செங்கல்பட்டு மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து

image

எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் – செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறகிறது. இதனால், இன்று (மார்.22) மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து மதியம்1.45, 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் பகுதி நேரமாக செங்கல்பட்டு – சிங்கப்பெருமாள் கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

Similar News

News March 23, 2025

சகல சௌபாக்யங்களை தரும் அஷ்டலட்சுமி

image

சென்னை பெசன்ட் நகரில் பிரசித்தி பெற்ற அஷ்டலட்சுமி கோவில் உள்ளது. தனித்தனி சன்னதிகளில் அருள் பாவிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது. இங்கு மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையும். உடல்நலம்பெற ஆதிலட்சுமியும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியும், தைரியம் பெற தைரியலட்சுமியும் என ஒவ்வொரு லட்சிமிகும் தனி சிறப்பு உண்டு. விசிட் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க.

News March 23, 2025

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News March 23, 2025

மின்சாரம் தாக்கி 9ஆம் வகுப்பு மாணவி பலி

image

எர்ணாவூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அனிதா (14). அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் இவர், நேற்று (மார்.22) இரவு ஈரக்கையால் செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். பதறிய பெற்றோர், சிறுமியை தூக்கி கொண்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஈரக்கையால் சுவிட்ச் அல்லது செல்போனை சார்ஜ் போடாதீர்கள்.

error: Content is protected !!